தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட கல்வி ஆண்டு நாட்காட்டியைக் குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் 2024- 25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.
இதன்படி பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை 220-ல் இருந்து 210 நாட்களாகக் குறைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட நாள்காட்டியை கல்வித்துறை வெளியிட்டது. இதன்படி சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாளை குரூப் 2 தேர்வு
தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வை 7.93 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக 2,763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குரூப் 2 தேர்வில் மொத்தம் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ தேர்வில் மொத்தம் 1820 பணியிடங்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்களுக்கு நாளை தேர்வு நடைபெறுகிறது.
இதையும் வாசிக்கலாம்: School Holidays: ஐ..ஜாலி: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு; திருத்திய நாட்காட்டி வெளியீடு!