ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்று ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது. 


இந்தியாவில் கொரோனா வைரஸின் மற்றொரு திரிபான ஒமிக்ரான் வைரஸால் 415 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 115 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்டா வைரஸைவிட ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகள் கூறியுள்ளன.


ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்து வருவதை அடுத்து, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தலாம் என்று ஏஐசிடிஇ பரிந்துரைத்துள்ளது. 


இதுகுறித்து ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார், ஏஐசிடிஇ கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 


''நாட்டில் நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கோவிட் 19 நோயால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலையும் உயிரிழப்பையும் தடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




அதேபோல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளை ஏஐசிடிஇ தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கோவிட் - 19  காலகட்டத்தில் கட்டணம் செலுத்துதல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல், போலிச் செய்திகளை மறுத்தல், ஆன்லைன் வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள் நடப்பதைக் கண்காணித்தல், இன்டர்ன்ஷிப் ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர் கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அனைத்து நேரங்களிலும் கடுமையான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு,  யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிமுறைகளைப் பின்பற்றி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தங்களின் வளாகங்களைத் திறப்பது, தேர்வுகள் மற்றும் வகுப்புகளை ஆப்லைன் அல்லது ஆன்லைன் அல்லது இரண்டு வகையிலும் நடத்திக் கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது’’.


இவ்வாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. 


Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண