Siddha Unani MD: சித்தா மற்றும் யுனானி MD மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விவரங்களை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சித்தா மற்றும் யுனானி MD மாணவர் சேர்க்கை

நடப்பு 2025-26 நிதியாண்டிற்கான சித்தா மற்றும் யுனானி MD மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விவரங்களை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.  விருப்பமுள்ள தகுதியான நபர்கள் இன்று முதல் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்து, வரும் 22ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இடஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு:

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து “செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம். சென்னை 600 106” என்ற முகவரிக்கு 23.10.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைவழியில் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி:

  • எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) பட்டமேற்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.Inhealth.in.gov.in, www.nyushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
  • விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

பட்டப் படிப்பு விவரங்கள்:

  • படிப்புப் பிரிவு : எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ பட்டமேற்படிப்பு
  • படிப்பிற்கான காலம் : 3 ஆண்டுகள்
  • படிப்பிற்கான கல்வித்தகுதி : தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

கல்லூரிகளின் விவரங்கள்:

  • அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை
  • அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை
  • அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை

எம்.டி. (சித்தா) மற்றும் எம்.டி. (யுனானி) மருத்துவ பட்டமேற்படிப்பு கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.