இக்னோ ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, மதுரையில் பிராந்திய மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.


இங்கு என்னென்ன படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை https://ignouadmission.samarth.edu.in/index.php/site/programmes என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணத்தில் விலக்கு


இக்னோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம்.


ஆகஸ்ட் மாதம் 31 வரை நீட்டிப்பு


இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள், ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேரலாம்.


எனினும் தொலைதூரப் படிப்பு குறித்த சந்தேகங்களை https://ignouadmission.samarth.edu.in/index.php/site/faq என்ற இணைப்பை க்ளிக் செய்து படித்து, தீர்த்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிப்பது எப்படி?


* மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in/index.php/registration/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, போதிய விவரங்களை உள்ளிட்டு, முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.


* அதைத் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.


* விண்ணப்பிப்பது எப்படி என்று வீடியோ வடிவிலும் காணலாம். இதோ லிங்க் - https://www.youtube.com/watch?v=URiAvPkyffs


மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.


இவ்வாறு இக்னோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: www.ignou.c.in