அரசுப் பள்ளிகள் மாணவர்கள் தவறுதலாக விண்ணப்பித்திருந்தாலும் பொதுப்பிரிவில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகள் மாணவர்கள் தவறுதலாக விண்ணப்பித்திருந்தாலும் பொதுப்பிரிவில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு ஆவணங்கள் சரியாக இருந்தால் 7.5 %  இடஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டிற்கு தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தகுந்த சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கையெழுத்தை பெற்று சான்றிதழை சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22 ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்விற்கு கடந்த மாதம் 19 ம் தேதி முதல் ஜனவரி 7 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 37அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல், அகில இந்திய அளவில் 15 சதவீத இடங்களும் இந்த கலந்தாய்வின் மூலம் ஒதுக்கப்படுகிறது.




இந்த கலந்தாய்விற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 மாணவர்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 மாணவர்கள் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதையடுத்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 


இதில், அரசு, சுயநிதி மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில்1,806 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தநிலையில், 7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சிவா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 


கலந்தாய்வு : 


இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு வருகிற ஜனவரி 27 ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த 2நாட்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக நடைபெற இருக்கிறது. அதேபோல், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு வருகிற ஜனவரி 30 ம் தேதி முதல் முறையாக ஆன்லைனில் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண