அண்ணா பல்கலைக்கழகத்தின் 43ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று (செப். 5) நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்று பட்டங்களை வழங்கி வருகின்றனர். 


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 43ஆவது பட்டமளிப்பு விழா, அங்குள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், வளாகக் கல்லூரிகள், அதன் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகள், பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களைப் பெற்று வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள்  பட்டங்களைப் பெற உள்ளனர். 


விழாவில் யாருக்குப் பட்டங்கள்?


இந்த விழாவில் பிஎச்டி முடித்த 1,485 மாணவ மாணவிகளுக்கும், தங்கப் பதக்கம் பெறும் 65 மாணவ, மாணவிகளுக்கும்  பட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.