செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு மையங்களில் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, நென்மேலி, பழவேலி, கீரப்பாக்கம், மாமண்டூர், மேல்மருவத்துார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் பள்ளியில், நீட் தேர்வு மையம் உள்ளன. இந்த மையத்தில், 2,688 மாணவர்கள், இன்று, நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்த மையங்களில், 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

 

நடைபெறும் மையங்கள்

 

 

1. பிரசன்ன வித்யா மந்திர் மாமண்டூர் - 300 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

 

2. ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளி - 408 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

 

3. வித்யாசாகர் குளோபல் பள்ளி - 528 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

 

4. பிளசிங் பள்ளி - 576 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

 

5. ஜி. பி பப்ளிக் பள்ளி - 480 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்

 

6. ஸ்கேட் வேர்ல்ட் பள்ளி - 396 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்


 

 



2023-24ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.



 






2023-24ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.47 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.  நாடு முழுவதும் 20.87 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர். மருத்துவ படிப்பதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா ,யுனானி ஆயுர்வேதா, மற்றும் ராணுவ மருத்துவ கல்லூரிகளில் பயிலும் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நடத்தப்படுகிறது.


 இன்று  நாடு முழுவதும் 499 நகரங்களில்  நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுத 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 95 ஆயிரம் மாணவிகளும், 51 ஆயிரம் மாணவர்களும் என 1.47 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆவர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 31 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், 2 மணி முதல் 5.10 மணி வரை நடைபெறவுள்ளது.


13 மொழிகளில் தேர்வு


தமிழ்நாட்டில் சுமார் 1.47 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது.மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


பல்வேறு கட்டுப்பாடுகள்


வழக்கம்போல தேர்வுக்கூடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், முழுக்கை சட்டை, இறுக்கமான, எம்பிராய்டரி போட்ட ஆடைகள், குர்தா, பைஜாமா ஆகியவற்றையும், மாணவிகள், ஜீன்ஸ், லெக்கின்ஸ், காதணி, மூக்குத்தி, மொதிரம், நெக்லஸ், பிரேஸ்லெட், கொலுசு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு கூடத்திற்கு காலணி அணிந்து செல்லவும் அனுமதி இல்லை. மொபைல் போன், கைக்கடிகாரம், பேனா, பென்சில், பவுச் பாக்ஸ், கால்குலேட்டர், பென் டிரைவ், ப்ளூ டூத், ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை எடுத்துச்செல்லக்கூடாது. இதனிடையே, மணிப்பூரில் கலவரம் காரணமாக, அந்த மாநிலத்தில் தேர்வு மையங்களைக் கொண்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் வேறு ஒரு தேதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.


முகக் கவசம், கையுறை, வெளிப்படையாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், 50 மில்லி அளவிலான கை சுத்திகரிப்பான், புகைப்படம் ஒட்டப்பட்ட நுழைவுச் சீட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, தேவையெனில் பிற சான்றிதழ்கள் (மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாதிரியான) பொருட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.