தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் இன்னும் ஓரிரு மாதங்களில் இறுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமையான நாளை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத்தேர்வு நடைபெற இருந்தது.


இந்த நிலையில், கணிதத்தேர்விற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் மீண்டும் கசிந்துள்ளது. 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவிற்கு இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போத சமூக வலைதளங்களில் கணிதத்தேர்விற்கான வினாத்தாள் கசிந்துள்ளது.


12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு வினாத்தாள் ஏற்கனவே கசியாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் வினாத்தாள் கசியாகியிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது வினாத்தாள் வெளியாகியிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்ததில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண