தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 9,76,089 மாணவர்கள் எழுதுகின்றனர். 


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


நேற்றைய முன் தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளான இன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.


9.76 லட்சம் பேர் எழுதுகின்றனர்


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில்  4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரியில் 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களை தவிர 5 திருநங்கைகள், 37 ஆயிரத்து 793 தனித்தேர்வாளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் இந்த தேர்வில் பங்குபெறுகின்றனர்.


இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4,025 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் பாடத்தை 50,000 மாணவர்கள் தேர்வு எழுதாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சட்டசபை வரை கொண்டுச்செல்லப்பட்டது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வில் பங்குபெறாத மாணவர்கள், தனித்தேர்வில் பங்குபெறலாம் என தெரிவித்தார்.


இந்நிலையில் நாளை 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்குகிறது. முதல் நாளான நாளை மொழி பாடத்திற்கான தேர்வு நடைபெறுகிறது.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu


ஏப்ரல்  6 - மொழித்தாள்


ஏப்ரல் 10 - ஆங்கிலம்


ஏப்ரல் 13-  கணிதம்


ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்


ஏப்ரல் 17- அறிவியல்


ஏப்ரல் 20- சமூக அறிவியல் 


12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை போலவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் காலை 10 மணிக்கு தொடங்கும். இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண் (register number/roll number), பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sabarimala : பங்குனி உத்திர திருவிழா...பம்பையில் ஐயப்பனுக்கு இன்று ஆராட்டு...யாருக்கெல்லாம் அனுமதி...?


'திமுக தலைவராக கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர் வர முடியுமா?' - வானதி சீனிவாசன் கேள்வி