மார்ச் / ஏப்ரல் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது,

Continues below advertisement

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடைபெற உள்ள மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear)/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தேர்வர்களிடம் இருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Continues below advertisement

நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி?

மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 22.12.2025 (திங்கட் கிழமை) முதல் 07.01.2026 ( புதன்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Service Centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்:

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்க வரும் தேர்வர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (Passport Size Photo) - 2 ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வுக் கால அட்டவணை

மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) /இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.