2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக் கட்டணம் செலுத்தக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் சேதுராம வர்மா கடிதம் அனுப்பி உள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:


கூடுதல் அவகாசம்


2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு, மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ டிஎம்எல் கட்டணம்‌ செலுத்துதல் தொடர்பாக கூடுதலாக கால அவகாசம்‌ வழங்கப்பட்டுள்ளது.


பொதுத்‌ தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின்‌ பெயர்ப் பட்டியல்‌ தயாரிக்கும்‌ பொருட்டு, அனைத்து உயர்நிலை , மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களும்‌ தங்கள்‌ பள்ளியில்‌ பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும்‌ மாணாக்கரது விவரங்களை 14.12.2022 முதல்‌ 28.12.2022 வரையிலான நாட்களில்‌ இணையதளம்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.


இணையதளம்


இந்நிலையில்‌ ஒரு சில பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும் ‌டிஎம்எல் கட்டணத்தினை செலுத்தவில்லை என தெரிய வருகிறது. மேற்குறிப்பிட்ட கட்டணத்தினை செலுத்தாத பள்ளிகளின்‌ பட்டியல்‌‌ இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களும்‌ பட்டியலில்‌ குறிப்பிட்டுள்ள பள்ளிகளின்‌ தலைமை ஆசிரியர்களுக்கு, பத்தாம்‌ வகுப்பு , மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ டிஎம்எல் கட்டணத்தினை 06.01.2023 02.00 PM முதல்‌ 20.01.2023 வரையிலான நாட்களில்‌ இணையதளம்‌ வழியாக செலுத்திட உரிய அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.


இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். 


10ஆம் வகுப்புத் தேர்வு


2022- 23 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.  11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.


10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu



ஏப்ரல்  6 - மொழித்தாள்
ஏப்ரல் 10 - ஆங்கிலம் 
ஏப்ரல் 13-  கணிதம்


ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17- அறிவியல்
ஏப்ரல் 20- சமூக அறிவியல்