10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இதன்படி, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாக உள்ளன. 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளன. 

அதேபோல 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக கடந்த 2 கல்வி ஆண்டுகளில் கற்றல் இழப்பு ஏற்பட்ட நிலையில், 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

மார்ச் 13 முதல் பொதுத் தேர்வு

இந்த நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி  முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 12th Exam Time Table 2022 Tamil Nadu

மார்ச் 13 - மொழித்தாள்
மார்ச் 15-  ஆங்கிலம்

மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி

மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்

மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்

ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

செய்முறைத் தேர்வுகள்

இந்த நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 7 முதல் 10ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வுகள் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுகளுக்கும் செய்முறை பொதுத் தேர்வுகளுக்கும் இடையேயான கால இடைவெளி குறைவாக இருப்பதால், சில நாட்கள் முன் கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள் எப்போது?