திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்கு உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (27) சிறுமியிடம் நண்பர் போல பழகி செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில்
இருவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்தளுக்கு முன்பு தனியாக சந்திக்க வேண்டும் என சிறுமியிடம் கூறி வரவைத்துள்ளார்.
அதன்பிறகு வந்த சிறுமியிடம் மகேந்திரன் ஆசைவார்த்தைகளை கூறி தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் தொடர்சியாக வன்கொடுமையில் ஈடுப்ட்டு வந்துள்ளனர். இந்நிலையில் மகேந்திரன் அவருடைய உற்ற நண்பன் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசனிடம் இதை கூறியுள்ளார். இதனை அறிந்த வெங்கடேசன் சிறுமியிடம் வன்கொடுமையை பற்றிய சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என கூறி பயமுறுத்தியுள்ளார். வெளியில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என பயந்த அந்த மாணவி, காதலன் மகேந்திரனுக்கு தெரியாமல் அங்குள்ள மறைவான பகுதியில் வெங்கடேசனை சந்தித்துள்ளார். தொடர்ந்து வெங்கடேசன் மிரட்டி, சம்மந்தப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளா். இந்நிலையில் மாணவி திடீரென கர்ப்பம் அடைந்துள்ளார். யார் காரணம் என்கிற குழப்பத்தில், இருவரையும் அழைத்து, உங்கள் இருவரால் நான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த இருவரும், மாணவியை சமரசம் செய்துள்ளனர். வெளியில் தெரிந்தால் மூன்று பேருக்கும் பிரச்னையாகிவிடும் என கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வெங்கடேசனும் , மகேந்திரனும் சேர்ந்து மெடிக்கல் ஒன்றில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி வந்து, மாணவியிடம் கொடுத்துள்ளனர். அவரும் வீட்டாருக்கு தெரியாமல் மாத்திரையை உட்கொண்டுள்ளார். கருகலைந்த நிலையில் சிறுமிக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டு, வீட்டில் சோர்வுடன் இருந்துள்ளார். அதை கண்ட அவரது பாட்டி, சிறுமியிடம் கேட்ட போது, நடந்ததை கூறி அழுதுள்ளார் சிறுமி. இதைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் இருவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேந்திரன் மற்றும் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கவும், மருத்துவ உதவி அளிக்கவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது போன்ற வேறு சிறுமிகளில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் அத்துமீறியிருக்கிறார்களா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.