அதிகரிக்கும் சைபர் மோசடி...


விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 35). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பகுதிநேர வேலை வாய்ப்பு தொடர்பாக பேசியுள்ளார். அப்போது அந்த நபர், கூகுளில் சென்று சில வாக்கியங்களை டைப் செய்து அதில் வரும் புகைப்படங்களுக்கு ரிவியூ கொடுத்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்று கூறியுள்ளார். பிரபு, ரூபாய் 150 பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் பிரபுவை தொடர்பு கொண்ட நபர்கள், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்துள்ளனர்.


95 ஆயிரம் மோசடி:


உடனே பிரபு, அந்த லிங்கினுள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டை பதிவேற்றம் செய்தார். பின்னர் அந்த நபர்கள் கூறியவாறு தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் செயலியில் இருந்து ஐஎம்பிஎஸ் மூலம் அந்த நபர் அனுப்பச் சொன்ன வங்கிகளின் கணக்கிற்கு 3 தவணையாக ரூ.95 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.


ஆனால் டாஸ்க் முடித்த போதிலும் பிரபுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இது குறித்து பிரபு, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண