மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு வார்த்தைக் கூட குரல் கொடுக்காத முரட்டுக்காளை காவ்யா மாறனுக்காக இப்படி கவலைப்படுறாரே என  ரஜினிகாந்த் பேசிய பேச்சை ட்ரோல் செய்து விளாசி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்:


ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அப்போது ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், ஹுக்கும் பாடல்,காவாலா பாடல், உள்ளிட்ட பல விஷயங்கள் பேசி இருந்தார். கடைசியாக,  கலாநிதி மாறன் பற்றி பேசும் போது, கலாநிதி மாறன் சன் ரைசர்ஸ் அணியில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டும். காவ்யாவை அப்படி சோகமாக டிவியில் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது என பேசியிருந்தார்.


ப்ளூசட்டை மாறன் ட்ரோல்:


இதை ப்ளூ சட்டை மாறம் டிவிட்டரில் ட்ரோல் செய்துள்ளார். டிவிட்டரில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளதாவது, ”மணிப்பூர் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி மற்றும் பலர் வருத்தம், கண்டனம் தெரிவிச்சிட்டாங்க. பட்.. முரட்டுக்காளை இதுவரை அதுபத்தி பேசல. ஆனா.. எந்த விஷயத்துக்கு வருத்தப்பட்டு இருக்காரு பாருங்க. இதுதான் தவைரின் தனித்தன்மை. ஹாட்ஸ் ஆஃப் ஜி. இது மாதிரி பல அரிய கருத்துகளை சொல்லிட்டே இருங்க‌. மக்களுக்கு மிகுந்த பயனைத்தரும்." என பதிவிட்டு ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதை ட்ரோல் செய்துள்ளார்.






சமூக வலைதளங்களில் காரசார விவாதம்:


ப்ளூ சட்டை மாறனை  திட்டி ரஜினி ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வரும் நிலையில், அதற்கும் பதில் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். மேலும் சூப்பர் ஸ்டார் என இந்திய ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்தை "சூப் ஸ்டார்" என படுமோசமாக விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக் கணிப்பில் லியோ, ஜெயிலர், இந்தியன் 2 மற்றும் கங்குவா உள்ளிட்ட படங்களில் எந்த படத்துக்கு அதிக வசூல் வரும் என கேட்டிருந்தார். அதற்கு அதிகப்படியான வாக்குகள் லியோவுக்குத் தான் வந்தது என்றும் நடிகர் விஜய் நம்பர் ஒன், கமல் நம்பர் 2, அஜித் நம்பர் 3 மற்றும் நம்பர் 4ல் தான் ரஜினி என இன்னொரு ட்வீட்டும் போட்டுள்ளார் ப்ளு சட்டை மாறன். இவரின் இந்த ட்வீட்டுகள் தான் தற்போது இணையத்தை மட்டும் அல்ல ரஜினி ரசிகர்களையும் சூடாக்கி வருகிறது.