தருமபுரி அருகே சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த வாலிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தருமபுரி அருகே உள்ள பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்த வேலு மகன் சத்ரியன்(25) என்பவர் சம்பா கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 17 வயதுடைய பெண்ணை காதலித்து வீட்டை விட்டு கடந்த மே மாதம் சென்றுள்ளார். அப்பொழுது பெண்ணின் தாய், மகன  காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர், சத்ரியனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



 

இதனை தொடர்ந்து, ஜாமினில் வெளிவந்த சத்ரியன் தான் காதலித்த பெண், தருமபுரி பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு சென்ற போது அப்பெண்ணை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தருமபுரி அடுத்த ஆலங்கரை செல்லும் வழியில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சத்ரியன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை எடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் ராஜராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சத்ரியன் 4 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். இந்த கடிதத்தில், நாம் காதலித்த போது வீட்டை விட்டு போய்விடலாம், என்னை அழைத்து சென்று போ, என்று சொன்னால், நான் உன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டேன். ஆனால் தற்போது, திருமணம் செய்து கொண்ட நம்மை பிரித்துவிட்டனர். நீயும் உன் அம்மா பேச்சை கேட்டு, இப்படி மாறிடுவாய் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் காதல் மனைவியை நினைத்து, தற்கொலை செய்து கொள்கிறேன். I LOVE YOU என குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்திருந்தார்.  தொடர்ந்து சத்ரியன் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தருமபுரி பகுதியில் இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.