லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் பெண்ணின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லிவின் உறவில் இருந்த பெண்:


மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் என்ற பகுதியில்  ஆண் மற்றும் ஏற்கனவே திருமணமான பெண் ஆகியோர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர். இவர்களுடன் அப்பெண்ணின்  இரண்டு மகள்களும் வசித்துவந்தனர். பீகாரைச் சேர்ந்த இப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் வேலை நிமித்தமாக அவர் மத்திய பிரதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். தினக்கூலி வேலை பார்த்துவந்த அந்த பெண்மணி, அருகில் வசித்துவந்த நபர் ஒருவருடன் லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளார்.  லிவ் இன்னில் இருந்த இளைஞருக்கு, அப்பெண்ணின் மூத்த மகள் மீது ஆசை இருந்துள்ளது. அவரை அடையத்துடித்த அந்த இளைஞர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதற்கான தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்துள்ளார்.




சிறுமி பாலியல் வன்கொடுமை:


கடந்த மார்ச் மாதம் அப்பெண் தனது இளைய மகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிடவே அந்த இளைஞர் வீட்டில் இருந்த மூத்தமகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அப்பெண் போராடியபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


சமீபத்தில் திடீரென அப்பெண்ண்ணிற்கு வயிற்றுவலி வரவே, அதுபற்றி தன் தாயிடம் கூறியுள்ளார். மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை விரைந்த தாயை, ஸ்கேன் செய்து பார்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஸ்கேன் செய்து பார்த்ததில் ஐந்த சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. சிறுமி கர்ப்பமானது குறித்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கபட்டபோது தன் மனக்குமுறல் அனைத்தையும் அந்த சிறுமி கொட்டியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மற்றொரு சம்பவம்:


அதே போன்று சாஹ்புரா காவல்நிலையத்திலும் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 5 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஒரு நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக புகார் அளித்துள்ளார். அப்பெண்ணுடன் பழகிய அவரது பக்கத்துவீட்டு நபர் அப்பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போட்டு அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர் உறவுக்கு மறுத்தபோது திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். இதே போன்று 5 ஆண்டுகளாக செய்துகொண்டிருந்த அந்த இளைஞர் திடீரென்று அப்பெண்ணுடனான தொடர்பை துண்டித்ததோடு, வேறுஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.




இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான இளைஞரைத் தேடி வருகின்றனர்.