அச்சரப்பாக்கம் : செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த பள்ளிபேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின், மகன் கணபதி , இவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை பார்ப்பதற்காக, அவருடைய அக்கா நந்தினி அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தனது அக்காவிடம் கணபதி, தனக்கு வேலையில் அதிக மன அழுத்தம் தருவதாகவும் , 6 மாதங்களாக தன்னை மன அழுத்தத்தில், தள்ளி ல்புரியாமல் தடுப்பதாகவும் இதனால் வேலையை விட்டு நிற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அக்கா தனது தம்பிக்கு சமாதானம் செய்துள்ளார்.


இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் கணபதி தூங்கி  கொண்டு இருந்த அறைக்கு சென்ற பொழுது தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணபதியின் அக்கா மற்றும் தாய் ஆகியோர் உடலை மீட்டு உள்ளனர். மேலும் தனது உயிரிழப்புக்கு காரணம், தான் காதலித்து வந்த பெண் ஷர்மிளா மற்றும் வேலையில் அதிக மன உளைச்சலுக்கு உட்படுத்திய சண்முகம், மணி ஆகியோர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.


இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கா நந்தினி உடனடியாக இது குறித்து அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். மேலும் தனது தம்பியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலையில் மன அழுத்தம் மற்றும் காதல் தோல்வி ஆகிய இரண்டு பிரச்சனைகளால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning..



வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)




 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண