Crime: காதலை கைவிட மறுத்த காதலன்.. செங்கல்லை வைத்து அடித்துக் கொலை.. காதலியின் சித்தப்பா வெறித்தனம்

காதலை கைவிட மறுத்த காதலனை, மது அருந்த அழைத்துச்சென்று, பெண்ணின் சித்தப்பா தனது நண்பருடன் இணைந்து செங்கல்லால் அடித்து கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள ஒரு கோடி கிராமத்தில் காதலை கைவிட மறுத்த காதலனை மது அருந்த அழைத்து சென்று பெண்ணின் சித்தப்பா நண்பருடன் இணைந்து செங்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

விழுப்புரத்தை மாவட்டம்  காணை அருகேயுள்ள  ஒருகோடி  கிராம எல்லையிலுள்ள குளத்தின் அருகில்  இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார்  உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் கப்பூர் காலனியை அரசு கலைக்கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர் ராஜன் என்பதும் வெட்டுக்காயங்களின் நள்ளிரவில் மர்ம நபர்கள், வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரனையில், கப்பூரை சார்ந்த பகுதியை சார்ந்த ராஜன் என்ற கல்லூரி மாணவர் ஒருகோடி பகுதியை சார்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததும் அந்த காதலை கைவிடுமாறு சிறுமியின் சித்தப்பா சத்யராஜ் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்து இளைஞர் காதலித்து வந்ததால் நண்பருடன் இணைந்து கல்லூரி மாணவரை மது அருந்த அழைத்து சென்று தலையில் செங்கல்லால் அடித்தும் கத்தியால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து காணை போலீசார் கொலை செய்த சத்யராஜ், லாலி கார்த்திக் ஆகிய இருவரையும் காணை போலீசார் கைது செய்தனர். காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவரை மது அருந்த அழைத்து சென்று செங்கல்லால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

Continues below advertisement
Sponsored Links by Taboola