Crime: மும்பையில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைக்கு செல்லும் இடங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி தான் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, மும்பையில் ஓடும் ரயில் பெண்ணுக்கு பாலியில் தொந்தரவு செய்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்து நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓடும் ரயில் பாலியல் தொந்தரவு:
அமிர்தசரஸில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது மகனும் உடன் இருந்தார். பொதுவாகவே விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கும். இதனால் அந்த பெண், தனது மகனுடன் சீட்டில் இடம் இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தார். இந்த ரயில் இரவு 8.27 மணியளவில் தாதர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, சில பயணிகள் கீழே இறங்கினர். அப்போது, பெண்கள் பெட்டியில் ஏறிய நபர், 32 வயதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவருடன் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்த, அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவர் கையில் வைத்திருந்த பையை கொள்ளையடிக்க முயன்றார். இதனை தடுத்த அந்த பெண்ணின் மகனை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த பையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
இதனை அறிந்த போலீசார் அந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மனோஜ் என்று அடையாம் காணப்பட்டுள்ளது. இவர், புனேவில் காவலாளியாக பணிபுரிந்த வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் தனது சொந்த ஊரான மும்பைக்கு சென்றார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மும்பையில் ஓடும் ரயிலில், தேர்வு எழுதச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுபோன்று, ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.