விசாகப்பட்டினத்தில் பேராசிரியர் ஒருவர் காணாமல் போன வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள மதுரவாடா பகுதியைச் சேர்ந்த  முரளி என்பவர் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்திரியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதனால் அவரது மனைவி மிருதுளா மற்றும் 7 வயது மகன் இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மதுரவாடா ரிக்ஷா காலனியில்  தனியாக வசித்து வந்தனர். 


கடந்த ஜூலை 9 ஆம் தேதி  வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய முரளி, 11 ஆம் தேதி ரீகாகுளத்தில் உள்ள தனது தாயாரைச் சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றார். இதற்கிடையே மகன் வீட்டுக்கு வராததால் முரளியின் தாய் இதுகுறித்து மிருதுளாவிடம் கேட்டுள்ளார். ஆனால் கணவர் முரளியை 2 நாட்களாக காணவில்லை என கூறிய அவர், இதுதொடர்பாக பி.எம்.பாலம் போலீசில் புகார் செய்தார். 




இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் களமிறங்கினர். தனக்கு மருமகள் மிருதுளா மீது சந்தேகம் உள்ளதாக முரளியின் தாயார் தெரிவித்துள்ளார். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது முரளி வெளிநாட்டில் இருந்த நேரம் அதே பகுதியைச் சேர்ந்த தன்னை விட 10 வயது குறைந்த ஷங்கர் என்ற  18 வயது இளைஞருடன் மிருதுளாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரும் அடிக்கடி மிருதுளா வீட்டுக்கு வந்து சென்றதாக கூறப்பட்டுகிறது. வெளிநாட்டில் இருந்து வந்த முரளி, நெருங்கி போய் பேசினாலும் மனைவி மிருதுளா விலகி விலகி சென்றுள்ளார். இதனால் முரளிக்கு மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக குடும்பத்தினரிடம் முரளி கூறி வந்துள்ளார். 


முரளி விசாகப்பட்டினத்தில் 60 நாட்கள் தங்குவார் என்பதால் இந்த காலக்கட்டத்தில் இருவரும் சந்திக்க முடியாது என ஷங்கரிடம் மிருதுளா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷங்கர் முரளியை கொலை செய்து விடலாம் என கூற அதற்கு மிருதுளா சம்மதம் தெரிவித்துள்ளார்.அதன்படி சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த முரளியின்  தலையில் பிரஷர் குக்கரைக் கொண்டு அடித்ததால் இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். 


பின்னர் சடலத்தை துணி மூட்டை போல் போர்வையில் போர்த்தி இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரிக்காவலசை திறந்தவெளி பகுதியில் வீசியுள்ளனர். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் மீண்டும் இருவரும் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் ஒருவரின் உடலை கண்டெடுத்தனர். முதலில் போலீசாருக்கு உயிரிழந்தது முரளி என தெரியாமல் விசாரணை நடத்தி வந்துள்ளனர். ஆனால் மிருதுளாவிடம் விசாரணை நடத்திய போது அவர்களுக்கு உண்மை தெரிய வந்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து மிருதுளா, அவரது காதலன் ஷங்கர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண