திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் இவருடைய மனைவி சாந்தி (47). இருசப்பன் 15 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது சாந்தி மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி கட்டிட வேலை பார்த்து வருகிறார் . கட்டிட வேலையை முடித்துவிட்டு கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இரவு 8.30 மணிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. சாந்தி உடனடியாக வீட்டில் இருந்த தன்னுடைய மகளிடம் வெளியெ சென்று வருவதாகக் கூறி சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் புதுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் சாந்தி சடலமாக உள்ளதாக தகவல் வந்தது. தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் கண்ணமங்கலம் காவல்துறையினர் சம்பவடத்திற்கு சென்று பார்த்தன. அப்போது சாந்தி 2 காதுகளும், கழுத்தும் அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தடயங்களை சேகரிக்கும் நுண்ணரிவு பிரிவு கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சுந்தர்ராஜ் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர், தனிப்படை அமைத்து, இறந்த சாந்தியின் செல்போனை மையமாக கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் . அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி வேல்முருகன் (47) என்பவர் திடிரென நாம் மாட்டிக்கொள்வோமோ என்று எண்ணி புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத்திடம் சரணடைந்தார். அதனையடுத்து கோபிநாத் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சசிகுமார் வேல்முருகனை கைது செய்தார்.
மேலும் சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், சம்பவடத்திற்கு குற்றவாளி வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டார்.
குற்றவாளி வேலுமுருகன் விசாரணையில் கூறியதாவது, ”சாந்தி என்னிடம் கடந்த 4 வருடமாக தொடர்பில் இருந்தார். தற்போது என்னை தவிர்த்து விட்டு இன்னொருவரிடம் தொடர்பில் இருந்தார். இதனால் சாந்திக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து எப்போதும் தனிமையில் சந்திக்கும் இடத்திற்கு வருமாறு அழைத்தேன், சாந்தி வந்தவுடன் எனக்கும் சாந்திக்கும் அது சம்பந்தமாக சிறிது நேரம் வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாந்தியை கொலை செய்தேன்” என்றார். சம்பவ இடத்தில் கொலை செய்தது எப்படி என்று துல்லியமாக போலீசாரிடம் குற்றவாளி வேல்முருகன் நடித்து காட்டினார். பின்னர் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு குற்றவாளியை அழைத்து சென்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்த, 12 கிராம் தங்க நகை, கொலைசெய்ய பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, குற்றவாளியை ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’