ஜெயிலில் இருந்தவரை பார்க்க வந்த பெண் அவருக்கு முத்தம் கொடுத்த நிலையில், அந்த கைதி உயிரிழந்துள்ளார். முத்தம் கொடுத்த பெண்ணை கைது செய்துள்ளனர்.


பெண் கைது


ஜெயிலில் இருந்து வந்தவரை பார்த்த போது முத்தம் கொடுத்து அவரை கொன்ற பெண்ணின் பெயர் ரேச்சல் டொலார்ட் என்று அறியப்படுகிறது. டென்னசி டிபார்ட்மென்ட் ஆஃப் கரெக்ஷன் (டிடிஓசி) மற்றும் டிக்சன் கவுண்டி ஷெரிப் துறையின் சிறப்பு முகவர்களால் ரேச்சல் டொலார்ட் காவலில் வைக்கப்பட்டார். டர்னி சென்டர் தொழிற்சாலை வளாகத்தில் போதைப்பொருள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாலார்ட் கடத்தல் பொருட்கள் மற்றும் கொலை வழக்கு ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, தற்போது ஹிக்மேன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



11 ஆண்டு சிறைதண்டனையில் உள்ள ஜோஷ்வா


போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஜோஷ்வா பிரவுனின் மரணத்திற்குப் பிறகு அவர் மீது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜோஷ்வாவின் தண்டனை காலம் 2029ல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலில் சந்தித்த டொலார்ட் போதைப்பொருளை ஜோஷ்வாவிடம் கொடுத்ததாக அங்கிருந்த அதிகாரிகள் சந்தேகித்தனர்.


தொடர்புடைய செய்திகள்: சூரியனுக்கும் வயதாகும்.. இறந்துபோகும்?! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஷாக் தகவல்கள்!


முத்தத்தின் மூலம் போதைப்பொருள் 


அவர் அப்போதும் இரண்டுமுறை முத்தங்கள் பகிர்ந்ததாக கூறிய அவர்கள், அரை அவுன்ஸ் மெத் (methamphetamine) சப்ஸ்டன்ஸை வாய் மூலம் கடத்தியதாகவும் கூறுகிறார்கள். மெத் என்பதை எளிதில் புரிந்துகொள்ள விக்ரம் படத்தில் கூறியிருப்பார்கள். கிராம் அளவில் அது இருந்தாலே போதும் நிறைய போதை பொருட்கள் தயாரிக்கலாம் என்று கூறுவார்கள். அதே விஷயம் தான் இது.



சிறையில் கடத்தல் பொருட்கள்


இதனை அயன் படத்தில் வருவது போல சிறிய பாலூனில் கட்டி வாய் மூலம் பகிர்ந்து அதனை ஜோஷ்வா விழுங்கி இருக்கிறார். அது ஓவர்டோஸ் ஆகி இறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். "இந்த சம்பவம் சிறைச்சாலைகளில் இதுபோன்ற பொருட்களை கடத்துவதன் உண்மையான ஆபத்துகளையும் அதன் பின்விளைவுகளையும் சுட்டிக்காட்டுகிறது. எங்கள் ஊழியர்கள், எங்கள் காவலில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் எங்கள் வசதிகளின் பாதுகாப்பை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக எங்கள் நிறுவனம் வழக்குத் தொடரும்", என்று TDOC இன் விசாரணைகள் மற்றும் நடத்தை அலுவலகத்தின் இயக்குனர் டேவிட் இம்ஹோஃப் கூறினார். டென்னிசி சிறைச்சாலைகளுக்குள் கடத்தல் பொருள்கள் நுழைவதைத் தடுக்க பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துகிறது என்று திருத்தத் துறை வலியுறுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.