1. நகா்ப்புற உள்ளாட்சித் தோதலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 2,18,901 வாக்காளா்கள் உள்ளனா். முதன்முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சில வேட்பாளர்கள் பிரச்சாரத்தை இன்று முதல் துவங்க உள்ளன

 



2. வாலாஜாபாத் ஒன்றியத்தின் முதல் ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

 

3. செங்கல்பட்டு மாவட்டம்  படாளம் காவல் நிலையத்துக்கு திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர், திடீரென காவல் நிலையத்தில் இருந்து தப்பிவிட்டார்.

 



4. கொரோனா வைரஸ் பரவலால், ஒரு இடத்தில் 10 பேருக்கு மேல் சேரக்கூடாது' எனக் கோரிய மனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

5. வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், இன்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

 



6. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பொறுப்பிலிருந்து திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.   கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி. சங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

7. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் எனறு மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.28ஆம் தேதி முதல் பிப்.4ஆம் தேதி வரை நடைபெறும். பிப். 5ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். பிப்.7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.

 


 

8. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

9. துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, சென்னை விமானநிலைய சரக்குப் பிரிவு ஊழியர்களிடம் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

10. விழுப்புரம் புறவழிச் சாலையில் சுதந்திர போராட்டத் தலைவர்கள் ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அனுமதி மறுக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் ஊர்திதமிழகம் முழுவதும் பொதுமக்க ளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.