கேரளாவில் இளைஞர் ஒருவர் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தனது திருமணத்தை நிராகரித்த காதலன் மீது ஆசிட் வீசியதாக 35 வயது பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.Student Suicide | ”பாலியல் துன்புறுத்தலால சாகும் கடைசி பொண்ணு நானாதான் இருக்கணும்..” கரூர் பள்ளி மாணவி தற்கொலை.. அதிரவைக்கும் கடிதம்..


திருவனந்தபுரம் மாவட்டம் பூஜாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (27). அவர் ஷீபா என்ற பெண்ணை சமூகவலைதளம் மூலம் சந்தித்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அருண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த ஷீபா அருண் வெறுப்பில் இருந்துள்ளதாக தெரிகிறது.


இந்த நிலையில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி அடிமாலி அருகே இரும்புபாலத்தில் உள்ள செயின்ட் ஆண்டனி தேவாலயம் அருகே அருண்குமாரை ஷீபா அழைத்துள்ளார். அருண் சிறிது தூரம் செல்வதற்கு முன்பு இருவரும் பேசிக் கொள்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது. அந்த வீடியோவில் ஷீபா அவரை நோக்கி நடந்து சென்று அவர் மீது ஆசிட் வீசுகிறார்.


 






இதில், அருண்குமாரின் ஒரு கண் பார்வையை இழந்ததாகவும், ஷீபாவின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அருண்குமார் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஷீபாவை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Online Game Addiction | பெரும் பரபரப்பு.. வீட்டில் இருந்து 33 லட்சம், 213 சவரன் நகைகளுடன் தப்ப முயன்ற மாணவன்.. என்ன நடந்தது?


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண