விழுப்புரத்தை அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை கடந்த 9.3.2021 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்பொழுது ஏ டி எம் மில் நின்றிருந்த பெண் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி வங்கி ஏடி எம் கார்டை வாங்கி கொண்டு மாற்று ஏ டி எம் கார்டை வழங்கியுள்ளார். அதன் பின்னர் விவசாயி ஏழுமலை ஒரு மாதம் கழித்து வங்கி ஏடி எம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்ற போது வங்கி ஏடி எம் கார்டு மூலம் பணம் எடுக்க முடியாததால் வங்கியில் சென்று புகார் அளித்துள்ளார்.
அப்பொழுது வங்கியில் விவசாயின் ஏடி எம்மை பரிசோதித்த வங்கி அதிகாரிகள் போலியான ஏடி எம் கார்டு என்று விவசாயின் கணக்கிலிருந்து சிறுக சிறுக 5 லட்சத்தி 65 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது விவகாரம் குறித்து விழுப்புரம் குற்றபுலனாய்வு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ் பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சியை கூத்தூர் கிராமத்தை சார்ந்த சீதாலட்சுமி என்பவர் விவசாயிடம் மாற்று ஏடி எம் கார்டை கொடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ஏடி எம் கார்டு மூலமாக 5 லட்சத்து 65 ஆயிரம் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாற்று ஏடி எம் கார்டை மூலம் மீண்டும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடி எம் மையத்தில் சீதாலட்சுமி பணம் எடுக்க வந்த போது துணை கண்காணிப்பாளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 5 லட்சம் மதிப்பிலான 108 கிராம் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் மீது திருச்சி, சமயபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 14 குற்றவழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.