மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாஹோல் மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் அவருக்கு மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்த நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மாவட்ட தலைமையகத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினரைப் பார்க்க வியாழன் இரவு ஜபல்பூரில் இருந்து ஷாதோல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


"தனது உறவினரைப் பார்க்க ஊருக்கு வந்த அந்த மூதாட்டி இரயில் நிலையத்தில் தங்கியிருந்துள்ளார். மறுநாள் காலை ஒரு ஆட்டோரிக்க்ஷா ஓட்டுநர் அவரை ரயில்நிலையத்தில் இருந்து பேருந்து ஏறுவதற்கான  பிரதான சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரதான சாலையில் இருந்து பேருந்து பிடித்துதான் அவரது உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய சூழல்.அதனால் அவர் ஆட்டோ ஓட்டுநரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடச் சொல்லி இருக்கிறார்" என போலீஸ் தரப்பு கூறுகிறது.


"அவர் அங்கே பேருந்திற்காக காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அங்கு வந்து அவரது கிராமத்திற்கு செல்ல லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால் மாற்றுப்பாதையில் அழைத்துச் சென்ற அவர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர அவரை அந்த நபர் மீண்டும் பிரதான சாலையில் இறக்கிவிட்டு தப்பிவிட்டார்” எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். 


வேறொரு சம்பவம்


அதே மத்தியப் பிரதேசம், குவாலியர் மாவட்டத்தில் நான்கு கால்களுடன் பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா எனும் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் நான்கு கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. 


2.3 கிலோ எடையுடன் பிறந்த இந்தப் பெண் குழந்தையை குவாலியரில் உள்ள மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவக் குழுவினர் தற்போது பரிசோதித்து வருகின்றனர்.


இதுகுறித்து ஜெயரோக்யா மருத்துவமனை குழுமத்தின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர்.கே.எஸ்.தாகத்  ஏ.என்.ஐ. நிறுவனத்திடம் பேசுகையில், ​​"பிறந்த குழந்தைக்கு 4 கால்கள் உள்ளன. உடல் ஊனமுற்றுள்ளது. சில கருக்கள் உடைந்து கூடுதலாக வளர்கையில் இவ்வாறு நிகழ்கிறது. இது மருத்துவ மொழியில் இஸ்கியோபாகஸ் (Ischiopagus) என்று அழைக்கப்படுகிறது. கரு இரண்டு பகுதிகளாகப் பிரியும்போது, உடல் இரண்டு இடங்களில் உருவாகி வளர்கிறது. இந்தப் பெண் குழந்தையின் இடுப்புக்குக் கீழே இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்துள்ளன. ஆனால் அந்தக் கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன.


தற்போது குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் உடலில் வேறு ஏதேனும் குறைபாடு உள்ளதா? எனப் பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்குப் பின் குழந்தை நலமாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம், அந்தக் கால்கள் அகற்றப்படும். அதன் மூலம் குழந்தை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனக் கூறியுள்ளனர்.


அவர் தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறிய பிறகு, அவர்கள் காவல்துறையை அணுகினர். இதை அடுத்து அவர்கள் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பிற குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளர்.
இதை அடுத்து அந்த 90 வயது மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது.


நாட்டில் நிகழும் பல்வேறு பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் ஆடை தொடங்கி பல்வேறு விஷயங்கள் காரணமாகக் காட்டப்படும் நிலையில் 90 வயது மூதாட்டியை ஒரு நபர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது குற்றவாளிகளைத் தவிர வேறு யாரும் இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் அல்ல என்பதை உணர்த்தியுள்ளது.