நேபாலில் 72 பேர் சென்ற பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தின் இடிபாடுகளில் இருந்து 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இரண்டு இன்ஜின்களால் இயக்கப்படும் ATR 72 விமானம் விபத்தியில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும் நான்கு விமான குழுவினரும் பயணம் செய்துள்ளனர். பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் தீயை அணைத்து பயணிகளை மீட்பதில் தற்போது அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், விபத்தில் சிக்கிய விமானத்தின் மிச்ச பாகங்கள் தீப்பற்றி எரிவதால் மீட்பு பணிகளை தொடர முடியாமல் உள்ளது.
விமான விபத்தை தொடர்ந்து அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு நேபால் பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா அழைப்பு விடுத்துள்ளார். நேபாள விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, காத்மாண்டுவில் இருந்து காலை 10.33 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில், சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.
புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களிலேயே விமானம் விபத்தில் சிக்கியுள்ளதால், விமான தரையிறங்கும்போது விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு நகரங்களுக்கு இடையேயான விமான நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
விபத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "யாரெனும் உயிர் பிழைத்துள்ளார்களா என்பது இப்போது எங்களுக்குத் தெரியாது" என்றார்.
இதேபோல, சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிலில் செஸ்னா பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானத்தின் பைலட் உயிரிழந்ததுடன், பயிற்சி விமானி காயமடைந்தார்.
சமீப காலமாக, விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இது பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில், தற்போது நேபாளத்தில் விபத்து நடந்துள்ளது.