மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அடுத்த மேலச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதான மில்லர். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் முதல் மனைவி இவரை விட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதால், கடந்த 2021 ஆண்டு கணவனை இழந்த மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் தாலுக்கா சேண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான அம்பிகா என்பவரை 2 வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

  




இந்நிலையில் அம்பிகாவின் 2வது கணவர் ஜெயகண்ணன் தலைமை ஆசிரியராக பணியாற்றி உயிரிழந்ததால் அவரது செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தொகை அம்பிகா பெயருக்கு வந்துள்ளது. இது குறித்து கேட்ட மில்லர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகையை வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என எச்சரித்துள்ளார். இதனால் மில்லர் - அம்பிகா இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. 




தொடர் தகராறு காரணமாக மில்லர் மற்றும் அம்பிகா தரப்பில் வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய நிலையில் மில்லரை பிரிந்து சென்ற அம்பிகா உறவினர்களுடன் சேர்ந்து மேலச்சாலை மில்லர் வீட்டிற்கு வந்து வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சூறையாடி, மில்லரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரின் 70 வயதான தாயார் சகுந்தலா  என்பவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். 




சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து படுகாயம் அடைந்த மில்லர் மற்றும் அவரது தாயார் சகுந்தலா இருவரையும்  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பி ஓடி அம்பிகா மற்றும் அவரது உறவினர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  முதல் கணவரின் செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகைக்கு ஆசைப்பட்டு 2 வது கணவரை  மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சீர்காழி அருகே 4 வகுப்பு சிறுவனை மிரட்டி ஒரினசேர்க்கையில் ஈடுபடுத்திய பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 4 -ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவனை, அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ, ஒன்பதாம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுவர்கள் மற்றும் 10 -ம் வகுப்பு படித்து தேர்வில் தோல்வியடைந்த ஒரு சிறுவன் என மூன்று பேர் சேர்ந்து, அருகிலுள்ள செங்கல் காளவாய் அமைந்துள்ள காட்டு பகுதிக்கு  அழைத்துச் சென்று மிரட்டி கட்டாயப்படுத்தி ஒரினசேர்க்கையில் ஈடுபடுத்தி  உள்ளனர். தொடர்ந்து அந்த சிறுவனுக்கு 3 பேரும் தொந்தரவு கொடுத்த நிலையில் தினமும் அச்செயல் தொடர்ந்துள்ளது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று சிறுவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.