மேலூர் அருகே குடும்ப தகராற்றில் கணவனை அரிவாளால் வெட்டிகொலை செய்த மனைவியால்  பரபரப்பு  ஏற்பட்டது.


மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி உட்பட்ட பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் பொன்னையன். அவரது மனைவி அழகம்மாள் இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில்  வசித்து வருகின்றனர்.





 இந்த நிலையில் பொன்னையன் குடிபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை கணவன் மனைவிக்குள்  பிரச்சனை ஏற்படவே ஆத்திரத்தில் அவரது மனைவி அழகம்மாள் கணவர் பொன்னையாவை துரத்தி கழுத்தில் அரிவாளால் வெட்டியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 








இதுகுறித்து தகவலறிந்த மேலூர் டிஎஸ்பி பிரபாகர் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த அவரது மனைவி அழகம்மாளை  கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது