திருவண்ணாமலையில் தாலியால் மனைவி கழுத்தை இறுக்கி கணவன் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருவண்ணாமலை மாவட்டம் அனபத்தூரைச் சேர்ந்த  ரஞ்சித் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது எதிர்வீட்டில் இருந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ள நிலையில் கௌசல்யா மாங்கல் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலைக்கு சென்று வந்துள்ளார். 


இதனால் தினமும் வேலைக்கு சென்று வந்த நிலையில் கௌசல்யா தனது நண்பர்களுடன் நீண்ட நேரம் போன் பேசி வந்துள்ளார். இதனால் குடிக்கு அடிமையான ரஞ்சித் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் டிவியை கௌசல்யா மீது தூக்கிப் போட்டு உடைத்ததாகவும், சித்திரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 


இதனால் கௌசல்யா அனக்காவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனடிப்படையில் போலீசார் ரஞ்சித்தை அழைத்து எச்சரித்து அனுப்பியிருந்தனர். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தம்பதியினர் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. 


இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கௌசல்யா கழுத்தை தாலிக்கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றரை வயது மகன் கபிலேஷை தூக்கிச் சென்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கௌசல்யாவின் தாய் செல்வராணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது.  வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)