காஞ்சிபுரம் ( kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள வெங்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 23). மது மற்றும் கஞ்சா ஆகிய போதை பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு சிறு தவறுகளை செய்துவிட்டு அடிக்கடி சிறை சென்று வருவது வழக்கம். இவர் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏகனாம்பேட்டை, செல்லியம்மன் நகர் பகுதியில் நேற்று அஜித், குமார் என்பவர் வீட்டிற்கு சென்று அங்கு டிவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு. கத்தியை கையில் வைத்துக்கொண்டு, அந்த வீட்டின் உரிமையாளரிடம்  தகராறில் ஈடுபட்டுள்ளார். 

 

ஏதோ சின்ன தப்பு பண்ணி விட்டேன்..

 

இவர் அதே பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்கும் ஒருவர் வீட்டிற்கு போவதற்கு பதில், வேறொரு வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஜிதை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் அஜித்தை அவர்கள் பாணியில் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த அஜித், "ஏதோ சின்ன தப்பு பண்ணி விட்டேன், என்னை போய் பிடித்துள்ளீர்களே, கொலை செய்தவனை எல்லாம் விட்டு விடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தீவிர விசாரணையை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா (என்கிற) சீனிவாசன் என்பவரை தனக்குத் தெரிந்த ஒருவர் கொலை செய்ததாகவும், அதை நீங்கள் பிடிக்கவில்லை என்னை மட்டும் ஏன் பிடித்தீர்கள் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

 

முன் விரோதம்

 

சீயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், இவருடைய நண்பன் வெங்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா(24). இருவரும் அடிக்கடி இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு இருவரும் ஒன்றாக ஒரு முறை மது அருந்திய பொழுது இளையராஜாவின் செல்போனை சீனிவாசன் திருடி சென்றுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது குறித்து இளையராஜா தனது நண்பர்கள் வட்டாரத்தில் சீனிவாசன் செல்போனை திருடியது குறித்தும் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி இளையராஜா சீனிவாசனை கைபேசியில், அழைத்துதிரிப்பேட்டை அருகே உள்ள தைலம் தோப்புக்கு, மது அருந்த அழைத்துள்ளார். இதனை அடுத்து குறிப்பிடப்பட்ட இடத்திற்கு சீனிவாசனும் மது அருந்த சென்றுள்ளார். அப்பொழுது கிரிபேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 29) அவரும் உடன் இருந்துள்ளார் அப்பொழுது அதிக போதையில் இளையராஜாவிற்கும் சீனிவாசனுக்கும் செல்போன் திருடிய தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில், முடிந்துள்ளது. ஒரு கட்டத்தில் இளையராஜா இரும்புராடால் சீனிவாசனை அடித்துக் கொலை செய்துள்ளார்.

 

சிறை காவலர்கள் அடிப்பார்களா?

 

 மேலும் இந்த தகவலை, இளையராஜா, அஜித் சிறையில் இருந்து வெளியே வந்தபொழுது அவரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அஜித்திடம் , இளையராஜா சிறையில் உணவு எப்படி இருக்கும், சிறை காவலர்கள் அடிப்பார்களா என்பது குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களான இளையராஜா மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கொலை செய்து உடலை ஊத்துக்காடு ஏரியில் புதைத்து விட்டு சென்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். 

 

இடத்தை அடையாளம் காட்டினார்கள்

 

இந்த நிலையில் சீனிவாசனின் மனைவி நாகவல்லி கடந்த ஏப்ரல் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சீனிவாசனுக்கு மற்றும் நாகவல்லிக்கும் கடந்து 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்து, வாழ்ந்து வந்த காலகட்டத்தில் , தான் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் முன்னதாக குற்றவாளிகள் இருவரும், ஊத்துக்காடு ஏரிக்கு இறந்துபோன, சீனிவாசனின் உடலை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினார்கள். இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது