விழுப்புரம்: மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த போதை ஆசாமி கைது.


மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி (25) என்ற பெண் சுற்றி திரிவார். இவர் அப்பகுதியில் வருபவர்களிடம் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி மரக்காணம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு டீக்கடையில் அருகே இருந்துள்ளார். அப்போது அந்த இடத்திற்கு மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கத்திக்குத்து பாலா (45) என்ற போதை ஆசாமி சென்றுள்ளார்.


ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த பெண்


இவரைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தகாத வார்த்தைகளில் திட்டி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கத்திக்குத்து பாலா அருகில் கிடந்த கல்லை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட வளர்மதி தலையில் தாக்கி உள்ளார். இதனால் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போதை ஆசாமி கத்திக்குத்து பாலா கைது..


மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த போதை ஆசாமி கத்திக்குத்து பாலாவை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் இறுதியில் தான் எதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்ததற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர். பட்டப் பகலில் பரபரப்பாக காணப்படும் மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போதை ஆசாமி கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




குற்றம் :- 


விழுப்புரம் : செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை...


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 48; கட்டட மேஸ்திரி. இவரது முதல் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், மகாராணி, 35; என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் 24 மற்றும் 22 வயதில் 2 மகன்களும், இரண்டாவது மனைவி மகாராணி மூலம் 14 மற்றும் 12 வயதில் இரு மகள்களும் உள்ளனர்.குமார் வீட்டு அருகே வசிக்கும் ஆசிரியர் செந்தில் 30; என்பவருக்கும், மகாராணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. செந்திலுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகும் இருவரது தொடர்பு நீடித்துள்ளது. இதையறிந்த செந்திலின் மனைவி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் குடும்பத்தினர் குமாரையும், மகாராணியையும் திட்டி தாக்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் குமார், மகாராணி வீட்டின் அறை கதவு திறக்காமல் இருந்துள்ளது. வெண்டிலேட்டர் வழியாக உள்ளே பார்த்தபோது குமார், மகாராணி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.