விழுப்புரம்: மரக்காணம் அருகே வேப்பேரியில் தவனை முறையில் வீட்டு மனை தருவதாக பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று ரூ.5 கோடி அளவிற்கு மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வேப்பேரி கிராமத்தில் காளிதாஸ் வள்ளி தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் முறுக்கேரி, சிறுவாடி பகுதியில் வீட்டு மனை விற்பனை செய்ய உள்ளதாகவும் மனையை தவனை முறையில் பெற்று கொள்ளலாம் எனக்கூறி ரூ.5 கோடி வரை பணம் பெற்றுள்ளனர். அதன் பின்னர் வீட்டு மனையை வழங்காமலும் பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காளிதாசிடம் சென்று பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது அடியாட்களை வைத்து மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது இரண்டு மாதத்திற்குள் பணத்தை தருவதாக காளிதாஸ், அவரது மனைவி வள்ளி தெரிவித்துவிட்டு சென்றவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளதால் பணத்தை இழந்தவர்கள் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் எஸ பி அலுவலகத்தில் இன்று புகாரளித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண