விழுப்புரம்: திருவக்கரை அருகே புதுச்சேரியை சார்ந்த இரு பிரபல ரவுடிகள் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை கொலை வழக்கில் பழிக்கு பழியாக மீண்டும் இரட்டை கொலை சம்பவம் அரங்கேறியுள்ளதாக போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை காட்டு பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடிகளான அருண் மற்றும் கோர்காடு அன்பரசன் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து மயிலம் காவல் நிலையத்திற்கு நிபந்தனை ஜாமீனில் கையொப்பம் இட தனது இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது கோர்காடு அருகே திடீரென வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று ஆயுத்தங்களால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அருண் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் அப்பகுதியிலிருந்து தப்பித்த்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு ஓடியபோது விடாது துரத்தி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட வெட்டி கொலை செய்ததுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வானூர் போலீசார் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சசாங்சாங் சாய் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் கடந்த 2020 ஆம் அண்டு முரளி, சந்துரு கொலை வழக்கில் இருவரும் சம்பந்த பட்டவர்கள் என்பதால் முகிலன் என்பவர் திட்டம் தீட்டி கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரவுடிகள் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்