விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பைக்கில் கடத்திச் செல்லப்பட்ட 40 வெளிநாட்டு பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், பறவைகளைக் கடத்தி சென்ற இரண்டு பேரை கைது செய்தனர்.


விழுப்புரம்: திண்டிவனம் புதுச்சேரி சாலை, எண்டியூர் அருகே வனத்துறையினர் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தபோது, வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி, கடத்திசென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்து திண்டிவனம் வன சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில், திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி அவற்றை புதுச்சேரி மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.


அவர்களிடமிருந்து புள்ளிமூக்கு வாத்து, கவுதாரி நீர்கோழி,  சதுப்பு கோழி உள்ளிட்ட 40 வெளிநாட்டு பறவைகள் மற்றும் பறவைகளை கடத்திச் செல்ல பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பறவைகளை வேட்டையாடி கடத்தி சென்ற மயிலம் பகுதியைச் சேர்ந்த சகாயம் மகன் சந்திரசேகர், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த ரோஜா மகன் பூபதி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண