விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் தனியார் உடற்பயிற்சி ஆசிரியர் சேர்ந்து கஞ்சா விற்பனை, அவர்களை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் குமார், இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். இந்நிலையில் இவரும் இவரது நண்பரான விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியை சார்ந்த ஸ்டீபன் (வயது 30) ஆகியோரும் கோட்டகுப்பம் அருகே வீடு வாடகை எடுத்து தங்கி உள்ளனர். கோட்டகுப்பம், ஆரோவில் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவது வழக்கம், அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.


கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய முதலியார் சாவடி அருகே கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்  மித்ரன் அவர்களின் மேற்பார்வையில் திவான் நகர்  அருகே ஆய்வாளர்  ராபின்சன் மற்றும் உதவி ஆய்வாளர்சத்தியானந்தம் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.


அதில் இருவரும் மாணவர்களும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் வீட்டில் இருந்த  சுமார் 1.370 கிலோ  கஞ்சா மற்றும்  எலக்ட்ரானிக் வெயிட் மிஷின், கஞ்சா அடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் இருசக்கர வாகனம்  கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து சுற்றுலாப் பயணிகளிடம் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் யாரேனும் விற்பனை செய்தால் அவர்களை பற்றிய தகவல்களை நேரடியாக காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா IPS., அவர்களின் 94981-11103. எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.