விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நகை பாலிஷ் போட்டு தருவதாக 50 ஆயிரம் மதிப்புடைய தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் மற்றும் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்கண்ணு என்பவரது மனைவி குப்பம்மாள். 77 வயதுடைய மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரண்டு பேர் நகை பாலிஷ் போடுவதாக மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய குப்பம்மாள் தனது வலையல் மற்றும் கம்மலை கழற்றிக் கொடுத்துள்ளார். அவற்றை தண்ணீரில் போட்ட அந்த மர்ம நபர்கள் மஞ்சள் பொடி தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.


இதனால் மஞ்சள் பொடி எடுப்பதற்காக குப்பம்மாள் வீட்டின் உள்ளே சென்று மஞ்சள். பொடியை எடுத்து வந்த பொழுது அந்த மர்ம நபர்கள் அவசர அவசரமாக தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்தது.  இது குறித்து தகவல் இருந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும், திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிப்பவர் கமலா வயது 82, இவர் ஈஸ்வரன் கோயில் மாட வீதியில் வாக்கிங் செல்வது வழக்கம் இந்த நிலையில் எப்பொழுது போல வாக்கிங் சென்ற கமலாவை பின்தொடர்ந்த இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கமலா கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.


இதுகுறித்து கமலா திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்து ஆறு சவரன் தங்கச் செயினை பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் சி சி டிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிபறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருவதாகவும், தனிப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் மெத்தன போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.