தற்கொலைக்கு துாண்டியதாக, காதலன் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே காதலியை தற்கொலைக்கு துாண்டியதாக, காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த வழுதாவூர், கீரைக்காரர் வீதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் ராஜ்குமார், (வயது 20) இவரும், அம்மணகுப்பம் கிராமத்தை சேர்ந்த மணவாளன் மகள் சிவரஞ்சனி, 20, என்பவரும், ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் புதுச்சேரி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிவரஞ்சனி கடந்த 15ம் தேதி, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பினர்.
சிவரஞ்சனியின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், ராஜ்குமாரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளது தெரியவந்தது. விசாரணையில், ராஜ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவரஞ்சனி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிவரஞ்சனியை தற்கொலைக்கு துாண்டியதாக கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தற்கொலைக்கு தூண்டுதல்
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 தற்கொலைக்குத் தூண்டுவதைத் தண்டிக்கும். S.306 - தற்கொலைக்குத் தூண்டுதல் - எந்தவொரு நபரும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலைக்குத் தூண்டுபவர் எவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.” பிரிவு 306 'தற்கொலைக்குத் தூண்டுதல்' என்ற தண்டனையை பரிந்துரைக்கிறது, பிரிவு 309 'தற்கொலைக்கு முயற்சி' என்ற தண்டனையை விதிக்கிறது. தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு 306 இன் எல்லைக்கு வெளியே உள்ளது, மேலும் அது பிரிவு 107, IPC உடன் படிக்கப்பட்ட பிரிவு 309 இன் கீழ் மட்டுமே தண்டனைக்குரியது.
வேறு சில அதிகார வரம்புகளில், தற்கொலைக்கு முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமாக இல்லாவிட்டாலும், அதைத் தூண்டுபவர் தண்டனைக்குரியவராகக் கருதப்படுகிறார். அங்குள்ள விதி தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பதற்கும் தண்டனை வழங்குகிறது. எனவே தற்கொலைக்கு முயற்சிப்பதற்கான தண்டனை விரும்பத்தக்கதாகக் கருதப்படாத இடங்களில் கூட, அதைத் தூண்டுதல் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சமூக நலனுக்காக, தற்கொலைக்கு உதவி செய்தல் மற்றும் தற்கொலைக்கு உதவி செய்தல் ஆகியவை தண்டனைக்குரியவையாகக் கருதப்படுகின்றன. அத்தகைய தண்டனை விதி இல்லாததால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கவும் இத்தகைய விதி விரும்பத்தக்கதாகக் கருதப்படுகிறது.