விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே லாரியில் டீசல் திருடிய வாலிபரை துரத்திப் பிடித்த போலீசார், கண்டெய்னர் லாரியில் இருந்த  100 லிட்டர் டீசல் பறிமுதல் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் லேபையில் வாலிபர் ஒருவர் அங்கு  நிறுத்தி வைக்கப்பட இருக்கும் லாரிகளில் இருந்து டீசல் திருடுவதாக ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர்  அனந்தராசனுக்கு  தகவல் வந்தது இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது, ஒருவர் டீசலை திருடிவிட்டு வேகமாக போலீசாரை கண்டவுடன் லாரியில் அதிவேகமாக சென்று விட்டார். போலீசார் அவரை சினிமா பாணியில் ஸேசிங் செய்து சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு மேலாக சென்று அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த குப்பன் (56)  என்பதும், இவர் தொடர் டீசல் திருட்டில் ஈடுபட்டது என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்த 100 லிட்டர் டீசல் மற்றும் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.  மேலும் இவர் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலை லேபை பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து டீசல்களை திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர