விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 27 இருசக்கர வாகனங்கள்  திருடிய 3  கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் தாலுகா பகுதி, விழுப்புரம் நகரம், வளவனூர், திருநாவலூர் காவல் நிலைய சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடிய கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் குச்சிப்பாளையம் சிவா என்கிற நல்லசிவம், மேல்காவனூர் அருண், வாணியம்பாளையம் முத்துக்குமரன் ஆகிய மூவரையும் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வளர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 27 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


ஜிபிஎஸ் கருவியால் சிக்கிய டூவிலர் திருடன்


திருவெண்ணைநல்லூர் பகுதியில் அதிக அளவிலான இருசக்கர வாகன திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக விவசாய நிலத்திற்கு செல்லும் பொழுது விவசாயிகள் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு வயலுக்குள் சென்றவுடன் இவர்கள் நோட்டமிட்டு இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் ஒரு இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தி, அந்த இருசக்கர வாகனத்தை பல்வேறு பேருந்து நிலையங்களில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் இரு சக்கர வாகன கொள்ளையர்கள் ஜிபிஎஸ் பொருத்திய இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர். பின்தொடர்ந்த காவல் ஆய்வாளர் ஜிபிஎஸ் மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.


27 இருசக்கர வாகனம் பறிமுதல்


மேலும் அவர்கள் கூட்டாக இருசக்கர வாகனத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளார். மேலும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட அருண், நல்லசிவம், முத்துக்குமரன் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.