இதுவல்லவா தெய்வீக காதல்! தெய்வத்திடமே வேலையை காட்டிய காதல் ஜோடி - காட்டிக்கொடுத்த சிசிடிவி

கோவில் உண்டியலை உடைத்து திருடிய இளம் காதல் ஜோடி, உண்டியல் திருட்டில் ஈடுபட்ட காதலர்களின் சிசிடிவி காட்சி வைரல்.

Continues below advertisement
விழுப்புரம்: கோவில் உண்டியலை உடைத்து திருடிய இளம் காதல் ஜோடி, உண்டியல் திருட்டில் ஈடுபட்ட காதலர்களின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
 
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - சேத்பட் சாலையில் சங்கராபுரத்தில் அமைந்துள்ளது சோலையம்மன் ஆலயம். கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்ற இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற அம்மனுக்கு காணிக்கை அளிக்க கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலையம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை இளம் காதல் ஜோடி கோயிலின் பின்பக்கம் மறைவாக தூக்கிச் சென்று உண்டியலில் இருந்த பணத்தை திருடித் கொண்டு தப்பிய சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
உண்டியலை காதலன் தூக்கிச் செல்ல காதலி கோயில் வெளிப்புறத்தில் நின்று யாரேனும் வருகிறார்களா என கண்காணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் காதலன் கோயில் உண்டியை தூக்கிச் சென்ற பிறகு இருவரும் சேர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிய பிறகு இருவரும் சேர்ந்து கோயில் வெளியே செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகத்தினர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் செஞ்சி போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளம் காதலர்களை தீவிரமாக தேடி வருகின்றனார். 
 
மேலும் காதலர் தினம் வர உள்ள நிலையில், அதனை கொண்டாட திருடினார்களா என்கின்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலர் தினம்

காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது அன்பு மற்றும் பாசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். ஆனால் உலகெங்கிலும் பரவலாகக் கொண்டாடப்படும். காதலர் தினத்தின் தோற்றம் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ் ஆட்சியின் போது பண்டைய கால ரோமிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. கிபி 3ம் நூற்றாண்டில் திருமணமாகாத வீரர்கள் சிறந்த போர்வீரர்களாக உருவாகிறார்கள் என நம்பி, இரண்டாம் கிளாடியஸ் இளைய போர் வீரர்கள் திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்தார். இருப்பினும் ‘Valentine’ என்ற ரோமானிய பாதிரியார், இந்த உத்தரவை மீறி ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார். 

Continues below advertisement