விழுப்புரம்: திருவென்னைய் நல்லூர் அருகே கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை தட்டிக்கேட்டி மனைவி மீது கொதி நிலையிலிருந்த குழம்பினை ஊற்றிய கணவனின் கொடூர செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய் நல்லூர் அருகேயுள்ள தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி பெரியநாயகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருக்கு அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு தொடர்பில் இருந்து வந்தது பெரியநாயகிக்கு தெரியவரவே இருவருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பு தொடர்பாக திருவெண்னைய் நல்லூர் காவல் நிலையத்தில் பெரியநாயகி புகார் அளித்தபோது கணவன் மனைவிக்குள் சமாதானமாக போகும் படி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் கணவர் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் வீட்டிற்கு சென்று வந்தது தொடர்பாக பெரியநாயகி கணவரிடம் கேட்டபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


ஆத்திரத்தில் கணவர் ஆரோக்கியசாமி வீட்டின் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த குழம்பினை எடுத்து மனைவியின் உடல் மீது ஊற்றியுள்ளார். இதனால் பாதிக்கபட்ட பெரியநாயகியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் திருவெண்ணைய் நல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கள்ளத்தொடர்பினை தட்டிக்கேட்ட மனைவி மீது கொதி நிலையில் இருந்த குழம்பினை ஊற்றிய கணவனின் கொடூர செயல் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண