செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த முள்ளிபாக்கம் அருகே சிறிய சிறிய விப்பேடு  கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா (வயது 19) 12 ஆம் வகுப்பு வரை படித்து வெங்கூர் தனியார் கம்பனியில் வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக அதே கம்பெனியில் பணியாற்றும்  ஒரகடம் ஊராட்சி, கட்டைகழனி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் உடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதல் விவகாரம் மீனாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து,  மீனாவின் பெற்றோர்கள்  கட்டாய திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மீனா நேற்று மாமல்லபுரம் கங்கை அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மீனா தனது கணவருக்கும் பெற்றோரிடம் இருந்து கொலை மிரட்டல் விடப்பட்டதால் நேற்று இரவு 7 மணியளவில் திருப்போரூர் காவல் நிலையத்தில் தனது காதல் கணவர் லோகநாதன் என்பவருடன் வந்து தஞ்சமடைந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி புகார் மனு ஒன்றை அளித்தார். 

 

திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார்

 

புகார் மனுவில்  கூறி உள்ளதாவது, நான் வெங்கூர் கிராமத்தில் வேலைக்கு சென்றபோது என்னுடன் வேலை செய்து வந்த லோகநாதன் என்பவருடன் கடந்த 1 வருடமாக பழகி வந்தேன். இந்த தகவல் எனது குடும்பத்தாருக்கு தெரிய வந்து லோகநாதனுடன் பழகக் கூடாது என்று மிரட்டி மீறி பழகினால் உன்னையும் உனது அவனையும், அவன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் (மீனா) எனக்கு  வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி என்னுடைய சம்மதம் இன்றி வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விட்டனர்.  மேலும், என்னை வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்து விட்டனர். இதனிடையே நான் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 24ஆம் தேதி மாமல்லபுரம் கங்கையம்மன் கோயிலில் லோகநாதனை திருமணம் செய்துக் கொண்டேன். இந்நிலையில் எங்களையும், எனது கணவரின் குடும்பத்தாரையும் கொன்று விடுவோம் என்று சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். 

 

கொலை மிரட்டல்

 

எங்கள் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆள்பலம், பண பலம் அதிகமாக இருப்பதால் எங்களை என்னவென்றால், செய்வார்கள், ஆகவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் மீனா கூறி இருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட திருப்போரூர் காவல் ஆய்வாளர்  வெங்கடேசன் இருவரும் மேஜர் ஆகி விட்டதாலும், கோயிலில் தாலி கட்டி திருமணம் நடைபெற்று விட்டதாலும் சட்டப்பூர்வமாக உங்களை பிரிக்க முடியாது என்றும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி இருவரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

எதிர்ப்பை  மீறி இருவரும் திருமணம்

 

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண் வீட்டில் பண பலம் அதிகமாக இருப்பதால் ஏழை வீட்டில் உள்ளவரை திருமண செய்து வைக்க முன்வருவதில்லை. இதனால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மாப்பிளை வீட்டார் மீனா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அதற்கு அவர்களின் பெற்றோர் மறுத்து வேறொரு மாப்பிளை பார்த்து நிச்சயம் செய்து முடித்து  திருமணம் ஏற்பாடு செய்தனர் அத்தனையும் மீறி இருவரும் திருமண செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டார் பெண்ணையும் அவன் கூட எப்படி வாழ்கிறாய் என்று கூறி கொலை மிரட்டல் விட்டுள்ளதாக காதல் ஜோடிகள் தெரிவித்துள்ளனர்.