விழுப்புரம்: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை சமாதானம் பேச அழைத்துச் சென்று தீர்த்து கட்டிய நண்பர்கள்; உடலை கடலிலும், மோட்டார் சைக்கிளை குலத்திலும் வீசிய நிலையில் இரண்டு சிறார்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மரக்காயர்தோப்பு வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). புதுச்சேரி ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி மாலை வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. கடந்த 8ம் தேதி கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, அவரது மனைவி நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் ஆகி மனைவி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த சிவாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை அந்த சிறுமியின் அண்ணன் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் மகன் அப்துல் சலாம் (வயது 19) என்பவரிடம் சிவாவை கண்டிக்கும்படி கூறியுள்ளார். அப்துல் சலாம் தனது நண்பர்களுடன் சென்று சிவாவை கண்டித்த பொழுது இரு தரப்பில் பிரச்சனை ஏற்பட்டிருந்தது.
அப்போது சிவா அப்துல் சலாமை தாக்கியுள்ளார். இதனால் இருவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சிவாவை சந்தர்ப்பம் கிடைக்கும் போது தீர்த்து கட்டி விட வேண்டும் என்ற திட்டத்தில் அப்துல்சலாம் இருந்துள்ளார். சிவாவிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அப்துல் சலாம் திட்டமிட்டு கொலை திட்டத்தை தீட்டி உள்ளார். கடந்த 6ம் தேதி அப்துல்சலாம் திட்டத்தின் படி அவர் விரித்த வலையில் சமாதானம் பேசுவதற்காக சிவா, அப்துல்சலாம் இருவரும் போன் மூலம் பேசி உள்ளனர்.
இதற்காக மது பார்ட்டி வைக்கவும் சிவா முடிவு செய்து, தான் வேலை செய்த இடத்தில் ரூபாய் 3 ஆயிரம் கடனாக பெற்று அந்தத் தொகையை கொண்டு மதுவை வாங்கி சிவா அப்துல் சலாம், நூர் முகமது மகன் அமீஸ் (வயது 19) ஆகிய மூன்று பேரும் கோட்டகுப்பம் பகுதியில் மது அருந்தி உள்ளனர். மது போதை அதிகமானதும் சிவா மோட்டார் சைக்கிளில் அப்துல்சலாம், அமிஸ் ஆகிய மூன்று பேரும் கூனிமேடு அருகே உள்ள கடற்கரையோரம் மது அருந்தி உள்ளனர். அப்போது அப்துல் சலாம் திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் குத்தி கொலை செய்து கடலில் வீசி சென்று வந்துள்ளனர்.
சிவாவின் மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து நகராட்சி பின்புறம் உள்ள மேயர் முத்துப்பிள்ளை குலத்தில் போட்டுவிட்டு கொலை செய்த ஆயுதத்தையும் குலத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சிவாவை தீர்த்து கட்டிய தகவலை அப்துல்சலாம், அமிஸ் ஆகியோர் தங்களது வீட்டுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இருவரையும் வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தகவலை கேள்விப்பட்டு குவைத் நாட்டில் இருந்த அப்துல்சலாமின் தந்தை ஷேக் இஸ்மாயில் கோட்டக்குப்பம் வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிவாவின் உடல் வெளியே வந்த பிறகு தான் கொலை சம்பவமே மூன்று நாட்கள் பிறகு போலீஸ் மற்றும் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் மது வாங்குவதற்கு கொலையாளிகளுக்கு பணம் கொடுத்த 16 வயது சிறுவன், கொலையாளிகளுக்கு மது பாட்டில்கள் வாங்கி கொடுத்த அமிஸ் தம்பியான 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு சிறுவர்கள் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், அப்துல் சலாம், அமீஸ் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.