அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே!


உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகு பயணித்து சண்டை சச்சரவுகளோடு  வாழ்க்கை பயணத்தை நகர்த்தி சென்றாலும், உங்களை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. கட்டுக்கடங்காத செலவுகளால் திக்கு முக்காடி, போகும் காலத்தை வர வைத்திருப்பார். 12ஆம் இடத்து கேது இருப்பதால் உங்களுக்கு இந்த 2025 உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை தான் கொண்டு வரப் போகிறது. சுருக்கமாக இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.


குரு பெயர்ச்சி:


துலாத்திற்கு அஷ்டமத்தில் பயணித்த குரு பெரிய சங்கடங்களை கொண்டு வராவிட்டாலும்  அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லாமல் அப்படியே வைத்திருந்திருப்பார்.  ஆனாலும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை வக்ரத்தில் இருக்கும் குரு, உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை நோக்கி தான் பயணிக்கிறார்.  சற்று ரிலாக்ஸான மனநிலையை கொண்டு வந்திருப்பார்.  பெரிய அளவில் நினைத்தது சாதிக்க முடியவில்லை என்றாலும், முடிந்த வகையில் உங்களுக்கு வெற்றிகளை தான் கொடுப்பார். மே மாதம் வரை குரு அஷ்டமத்தில் பயணித்து, திடீர் தனயோகத்தையும் வரவையும் கொண்டு வருவார். தேவைப்படும் பணம் ஏதேனும் ஒரு வழியில் உங்கள் கைகளுக்கு வந்து சேரலாம்.  ஆனால், அதற்காக நீங்கள் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியது இருக்காது.


ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறும் குரு:


இதுநாள் வரையில் அஷ்டமத்து குருவாக செயல்பட்டு வந்த குரு பகவான் தற்போது பாக்கிய குருவாக மாறுகிறார். பிறகு என்ன கவலை இருக்கிறது உங்களுக்கு? இதுநாள் வரை தாமதமான திருமணங்கள் விரைவில் நடைபெறும். வேலை மாற்றங்கள் வேலை தொடர்பான புதிய முயற்சிகள் அனைத்துமே வெற்றி தான் கிடைக்கும். நமக்கு போட்டியாக எதிரியாக யார் வந்தாலும் அவர்களை வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.


கேட்ட இடத்தில் கடன் கிடைப்பது மட்டுமல்லாமல் பெரிய தொகை உங்களுக்கு கிடைத்து, அதன் மூலம் வெற்றி காண்பீர்கள். காதல் விவகாரங்களில் நிச்சயம் இரு வீட்டார் சுமூகத்தோடு திருமணம் நடைபெற வாய்ப்புண்டு.   குழந்தைப்பேறு தொடர்பான காரியங்களிலும் நல்ல தகவல்கள் செவிக்கு வந்து சேரும். புதியதாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த வருடம் சிறப்பான வருடமாக அமையும். புதிய வாகனம் வாங்க வேண்டும், பழைய வாகனத்தை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது ஏற்ற காலகட்டம். இடம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு, விடுபடுவதற்கான ஏற்ற நேரம் இதுவாகும்.  மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கும்  தருவாயில், தெரிந்தவர்கள் தானாக ஒன்று கூடி சேருவார்கள். எனக்கு யாருமே இல்லை என்று கவலையிலிருந்து உங்களுக்கு அனைவருமே நான் இருக்கிறேன் என்று  குரல் கொடுப்பார்கள்.


ராகு கேது பெயர்ச்சி:


ராசிக்கு ஐந்தாம் இடத்தில் வரும் ராகுவால் மிகப்பெரிய நன்மையும் யோகமும் ஏற்பட போகிறது. ராகுவை பொறுத்தவரை ஐந்தாம் வீட்டில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்த மாட்டார்.  விஸ்தாலமான சிந்தனையை கொடுப்பார். அதன் மூலம் நல்ல வருமானத்தையும் கொடுப்பார். உங்கள் வீட்டில் ஆறாம் இடத்தில் இருந்த ராகு மே மாதத்திற்கு பிறகு பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டிற்கு வருவது  கடன்களை முழுவதுமாக அடைக்க வைக்கும். ஆறாம் வீட்டிற்கும் 12 ஆம் வீட்டில் ராகுவும் வரும் போது எதிரிகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கும். எவ்வளவு பெரிய நோய்களாக இருந்தாலும் அந்த நோய்களிலிருந்து மருத்துவத்தின் மூலம் விடுதலை கிடைக்கும்.


11 ஆம் வீட்டில் கேது அமர்ந்து உங்களின் கஷ்டங்களை போக்க போகிறார். விநாயகரின் வழிபாடு மூலமாக இழந்ததை நீங்கள் மீண்டும் பெற போகிறீர்கள். ஆன்மிக சுற்றுலாவுக்கு தயாராக இருப்பீர்கள். பெரிய மகான்களின் ஆசிர்வாதம் கிட்டும். தெய்வ அனுக்கிரகத்தோடு வாழ்க்கையில் பெரிய சாதனைகளை புரிய  முன்  முயற்சி எடுப்பீர்கள். அயல்நாடு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.


 பதினொன்றாம் வீட்டில் செவ்வாயின் சஞ்சாரம்:


 அன்பார்ந்த வாசகர்களே  இந்த நாள் வரையில் ராசியில் பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்து கொண்டு, எவ்வளவு முயற்சி எடுத்தாலும்  தொழிலில் ஒரு பெயர் வாங்க முடியவில்லை என்று ஏங்க வைத்திருப்பார்.  அப்படியான சூழ்நிலை தற்போது மாறி பதினோராம் வீட்டில் அமரும் செவ்வாயால்  வேலையில் நல்ல பெயர்,  வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கான உயர்வு,  நல்ல பணம் சம்பாதித்தல் என  எதிர்காலம் சிறப்பாக அமைவது போன்ற நல்ல காரியங்கள் ஏற்படப்போகிறது.