விழுப்புரம் அருகே உள்ள  எல்லிசதிரம் சாலை தனியார்  கல்லூரி அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தினம்தோறும் அவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனகள், பொதுமக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் கப்பூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் வாகனத்தை வழி மறித்து உன்னை பீர் பாட்டிலால்  குத்தி விடுவேன் என மிரட்டி  பாக்கெட்டில் வைத்திருந்த 10500  பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விட்டு பணத்தை பிடுங்கி சென்ற சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விழுப்புரத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் அனைத்திலும் மூன்று பேர் கொண்ட கும்பலால் நடைபெற்று வருகிறது.  இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம்  தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.