விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே டிப்பர் லாரி மோதி, கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (எ) விஜய், 23 பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சையன்ஸ் படித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெமிலி-திருவக்கரை சந்திப்பு அருகில் உள்ள ரோஜாக்குட்டையில் இருந்து மெயின் ரோட்டிற்கு ஏறியுள்ளார்.


அப்போது, பெரும்பாக்கத்தில் இருந்து திருவக்கரை நோக்கி சென்ற டிப்பர் லாரி, கார்த்திக் பைக் மீது வேகமாக மோதி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வானூர் போலீசார், இறந்தவரின் உடலை எடுக்க முயன்றனர். அதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியில் அதிகளவில் குவாரிகள் உள்ளதால், ஜல்லி, கிரஷர் பவுடர் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள், பாதுகாப்பின்றி அதிகவேமாக செல்கிறது.




இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகக்கூறியும், பலமுறை போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியும் திருவக்கரை சாலையில், கற்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டக்குப்பம் ஏ.எஸ்.பி. வானூர் வட்டசியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாமல், மக்கள், உடலை எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், மறியலில் ஈடுப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி களைய செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா, ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்,பி., பார்த்திபன் ஆகியோர் வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள், இப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் லாரிகள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகத்தடை அமைக்க வேண்டும், சம்பந்தப்பட்ட கிரஷர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி அளித்தனர். அதன் பிறகு, அங்கிருந்து இறந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக திருவக்கரை சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண