விரும்பும் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுங்கள் என்று மாணவர்களை காதலிக்க தூண்டியதாக ஆசிரியர் மீது பெற்றோர்கள் புகாரளித்தனர். 


கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர், 10ம் வகுப்பு மாணவர்களிடம், நீ யாரையாவது காதலிக்கிறாயா?, இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது? என அடிக்கடி கேட்டுள்ளார். மேலும், விரும்பும் பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுங்கள் என்று மாணவர்களுக்கு தவறான வழிகாட்டியுள்ளார்.


இது குறித்து ஒரு மாணவன் தந்தையிடம் கூறவே அவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானசேகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஊர் பிரமுகர்கள், பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர் முரளியிடம் புகார் கூறினர்.


இதையடுத்து தலைமை ஆசிரியர், 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியரை அழைத்து விசாரித்தார். விசாரணையில், ஆசிரியர் ஒழுங்கீனமாக பேசியது உண்மை என தெரியவந்தது. பாரூர் போலீஸ் ஸ்டேஷன் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிப்பதாக, ஊர் பிரமுகர்கள் கூறினர். 


இதை கேட்டதும் அந்த ஆசிரியர், 'என் மீது புகார் அளித்தால், என் சாவுக்கு நீங்கள்தான் காரணம் என அனைவரது பெயரையும் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வேன்,' என மிரட்டியுள்ளார்.


இதையடுத்து மாணவர்கள் நலன் கருதி, அந்த ஆசிரியர் பள்ளிக்கு வரக்கூடாது என ஊர் மக்கள் தலைமை ஆசிரியரிடம் கூறி விட்டு சென்றனர். அந்த ஆசிரியர் வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண