விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா கணபதிபட்டு கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் தமிழரசன் (வயது21). இவர் விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பிரபல செல்போன் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே கடையில் ஆடிட்டராக பணிபுரியும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையில் ஆடிட்டிங் செய்த போது கடையில் இருந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. அப்போது பல்வேறு வகையிலான விலை உயர்ந்த சுமார் 26 செல்போன்கள் குறித்த வரவு செலவு கணக்கில் வராமல் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன்களின் மதிப்பு 6 லட்சத்து 51 ஆயிரத்து 830 ரூபாய் எனக்கு கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து ஆடிட்டர் சுரேஷ் பாபு மற்றும் அந்த நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் செல்போன்களை விற்பனை நிலையத்தில் பணிபுரியும் தமிழரசன் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து சுரேஷ் பாபு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். மேலும் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த 26 செல்போன்களையும் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் தமிழரசன் திருடி சென்று குறைந்த விலைக்கு பலரிடம் விற்பனை செய்தது அம்பலமானது. அதனை அவர் விற்று அதன் மூலம் அவருக்கு 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது. அந்த தொகையை வைத்துக்கொண்டு அவர் சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கவும் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. அதனை அடுத்து தமிழரசனை காவல் துறையினர் கைது செய்தனர். அந்த நபர் செல்போன்களை விற்று வைத்திருந்த பணத்தையும் அவரிடம் இருந்து காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் தமிழரசனை விழுப்புரம் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர் படுத்தினர்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்